மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர், சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
குடும்பப் பாங்கான சீரியல் டூ கிளாமர் குயின் : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ தொடரில் மிகவும் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் அறிமுகமானார் தர்ஷா. புடவை, தலைநிறைய பூ என அடக்க ஒடுக்கமாக நடித்தபோதே, இன்ஸ்டாகிராமில் மாடர்ன் போட்டோஷூட்களை நடத்தி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கத் தொடங்கினார்.
விஜய் டிவி என்ட்ரி மற்றும் சினிமா வாய்ப்புகள் : இணையத்தில் இவர் காட்டிய அதீத கவர்ச்சி இவருக்கு அதிக ஃபாலோயர்களைப் பெற்றுத் தந்தது. இதன் மூலம் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யில் போட்டியாளராகக் களம் இறங்கினார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், இந்த நிகழ்ச்சிகள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரவில்லை. அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்தார், எனினும் வெள்ளித்திரையிலும் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலம் கிடைக்கவில்லை.
சப்ஸ்கிரிப்ஷனில் அதிரடி கவர்ச்சி : சினிமா மற்றும் டிவி வாய்ப்புகள் மந்தமான நிலையில், மீண்டும் தனது ஆஸ்தான பிளாட்ஃபார்மான இன்ஸ்டாகிராமில் முழு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் ‘சப்ஸ்கிரிப்ஷன்’ (Subscription) மூலம் பணம் செலுத்தும் ரசிகர்களுக்காக முன்னெப்போதையும் விட மிகவும் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.
தற்போது மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி இவர் வெளியிட்டுள்ள உச்சகட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன. சப்ஸ்கிரிப்ஷனில் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாகப் பதிவிடப்படும் இந்தப் புகைப்படங்கள் லீக்காகி வைரலாவதால், இவரின் சப்ஸ்கிரிப்ஷன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “இந்த ரேஞ்சுக்கு தரிசனத்தை எதிர்பார்க்கவில்லை” என ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் மிரண்டு போய் பதிவிட்டு வருகின்றனர்.